indian military force attacks nagaland terrorists
மியான்மர் எல்லையில் நாகாலாந்து தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது-
அதிகாலை முதல்...
"மியான்மர் எல்லையில் நாகாலந்து தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு அதிகாலை முதலே தொடங்கப்பட்டது. தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் கடும் தாக்குதல் தொடுத்தனர்.
இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் தரப்பில் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ராணுவ தரப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தேடுதல் வேட்டை
தொடர்ந்து மியான்மர் எல்லையில் நாகாலாந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவத்தினர் சர்வதேச எல்லையை கடக்கவில்லை’’.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம், இந்திய ராணுவத்தினர் மியான்மர் எல்லையில் நாகாலாந்து தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்தினார்.
இதற்கு பதிலடியாக மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
