ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை உலக நாடுகளுக்கு பரப்ப மத்திய அரசு அனைத்துக்கட்சிகள் அடங்கிய 7 குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றவர்கள் யார்? யார்? அவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்வார்கள்? என்பது குறித்து பார்ப்போம்.

Operation Sindoor 7 All Party Committees: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் அழித்தது. இதன்பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் மோதல் ஏற்பட்ட நிலையில், நம்முடைய முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் சின்னபின்னமாகின.

மத்திய அரசு அமைத்த 7 குழுக்கள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும். பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையிலான இந்த குழுவில் கனிமொழி கருணாநிதி (திமுக), சசி தரூர்( காங்கிரஸ்) ரவி சங்கர் பிரசாத் (பாஜக) சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக), சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) என மொத்தம் 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அரசு அமைத்துள்ள 7 குழுக்களின் முழு விவரங்களை பார்க்கலாம்:

குழு-1: தலைவர்- வைஜயந்த் பாண்டா (பாஜக எம்.பி.)

உறுப்பினர்கள்- நிஷிகாந்த் துபே, ஃபாங்னான் கொன்யாக், ரேகா ஷர்மா, அசாதுதீன் ஓவைசி, சத்னம் சிங் சந்து, குலாம் நபி ஆசாத், ஹர்ஷ் ஷ்ரிங்லா

இந்த குழு எந்த நாட்டுக்கு செல்லும்?: இந்த குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீரியாவுக்குச் செல்லும்.

குழு-2: தலைவர்- ரவிசங்கர் பிரசாத் (பாஜக எம்.பி.)

உறுப்பினர்கள்- டக்குபதி புரந்தேஸ்வரி, பிரியங்கா சதுர்வேதி, குலாம் அலி கட்டனா, அமர் சிங், சாமிக் பட்டாச்சார்யா, எம்.ஜே.அக்பர், பங்கஜ் சரண்

எங்கு செல்லும்?:  இந்தக் குழு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் செல்லும்.

குழு-3: தலைவர்- சஞ்சய் ஜா (ஜேடியு எம்.பி.)

உறுப்பினர்கள்- அபராஜிதா சாரங்கி, யூசுப் பதான், பிரிஜ் லால், டாக்டர். ஜான் பிரிட்டாஸ், பிரதான் பருவா, ஹேமங் ஜோஷி, சல்மான் குர்ஷித், மோகன் குமார்

இந்த குழு எங்கு செல்லும்?: இந்தோனேசியா, மலேசியா, கொரிய குடியரசு, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்

குழு 4: தலைவர்- ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா எம்.பி.)

உறுப்பினர்கள்- பன்சுரி ஸ்வராஜ், இ.டி.முகமது பஷீர், அதுல் கர்க், டாக்டர். சமீத் பதக், சுமன் குமாரி மிஸ்ரா, எஸ்.எஸ். அலுவாலியா, தூதர் சுஜன் சினாய்

இந்த குழு எங்கு செல்லும்?: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, சியரா லியோன்

குழு-5: தலைவர்- சசி தரூர் (காங்கிரஸ் எம்.பி.)

உறுப்பினர்கள்- சர்பராஸ் அகமது, ஜிஎம் ஹரிஷ் பாலயோகி, ஷஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, மிலிந்த் மூர்த்தி தேவ்ரா, தரஞ்சித் சிங் சந்து, தேஜஸ்வி சூர்யா

இந்த குழு எங்கு செல்லும்?: அமெரிக்கா, பனாமா, கனடா, பிரேசில், கொலம்பியா

குழு-6: தலைவர்- கனிமொழி கருணாநிதி (திமுக எம்.பி.)

உறுப்பினர்கள்- ராஜீவ் ராய், மியான் அல்தாஃப் அகமது, கேப்டன் பிரிஜேஷ் சௌதாலா, பிரேம் சந்த் குப்தா, டாக்டர். அசோக் குமார் மிட்டல், தூதர் மஞ்சீவ் எஸ் பூரி, தூதர் ஜாவேத் அஷ்ரஃப்.

இந்த குழு எங்கு செல்லும்?: ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா மற்றும் ரஷ்யா.