43 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 43 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துளது. China Love, Data My Age, We TV உள்ளிட்ட 43 மொபைல் ஆப்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிக் டாக், ஷேர் இட், ஹெலோ ஆப் உள்ளிட்ட 49 சீன ஆப்களுக்கு ஆப்படித்த இந்திய அரசு, தற்போது 43 ஆப்களை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்துள்ளது.