இந்திய இளம்பெண்களில் 60 சதவீதம் பேர் வேற்று சாதி ஆணை மணம் முடிக்க தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஃபனிஹல் என்ற ‌திருமண இணையர் தேடும் தளம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. மணமகன் வேண்டி‌ தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள 6,000 பெண்களில் 60 சதவீதம் பேர் வேற்று சாதி நபரை ‌மணக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அத்தளம் தெரிவித்துள்ளது. ‌‌

தங்களுக்கு வரும் கணவர் சிறந்த கல்வித் தகுதியுடன் இருக்க வேண்டும் என 85 சதவீத பெண்கள் எதிா்பாா்ப்பதாகவும், கூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட பாதிப் பெண்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.