நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீவதமாக குறையும் என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
துாத்துக்குடி விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததாவது: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். பண அட்டை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் பண பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனையை அரசு கொண்டு வருவது மக்களுக்கு உகந்ததல்ல. நாம் வங்கியில் சேமித்த பணத்தை எடுக்கக் கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.

ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், பணமும், கடன் அட்டையும் பயன்படுத்துகின்றனர். மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. இனி 5 சதவீதமாக குறையும் வாய்ப்புள்ளது என்றார்.