இந்தியாவில் அதிகரித்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை!

இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது

Indian domestic aviation industry has experienced a remarkable surge in passenger traffic smp

இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு வளர்ச்சி 38.27 சதவீதமாகவும் மாதாந்திர வளர்ச்சி 23.13 சதவீதமாகவும் உள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சமீபத்திய ஆய்வின்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 1190.62 லட்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 38.27 சதவீதம் அதிகமாகும். 

இந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை 148.27 லட்சமாக இருந்தது. மாதாந்திர வளர்ச்சி விகிதம் 23.13 சதவீதமாக  உள்ளது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, இந்த துறையின் மீட்சித்திறன் மற்றும் தொற்று நோய் பாதிப்பு சவாலில் இருந்து இத்துறை மீள்வதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களில் ரத்து விகிதம் வெறும் 0.65 சதவீதம் வரை மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் பயணிகளின் புகார்களும் குறைந்துள்ளன.

ஜி20 குழுவினரை சந்திக்கும் பிரதமர் மோடி!

இந்த வளர்ச்சியைப் பாராட்டியுள்ள மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா  சிந்தியா, பாதுகாப்பான, திறன்வாய்ந்த மற்றும் சூழலை மையமாக் கொண்ட விமானப் போக்குவரத்துச் சூழலை  வளர்ப்பதில் விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூட்டு முயற்சிகள் ஒரு சான்றாகும் என்று கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் பயணத் தேவைகளுக்கு ஏற்ப பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதில் விமானப் போக்குவரத்துத் துறை உறுதிபூண்டுள்ளது என்றும் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா  சிந்தியா தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios