தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கலிகஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான காரி மஞ்சூர் அகமது, எகிப்தில் நடைபெற்ற சர்வதேச குர்ஆன் ஓதுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். 

துருக்கியிலும் மலேசியாவிலும் இதுபோன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று முறையே ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் இடங்களைப் பெற்றுள்ளார்.

இத்தகைய போட்டியில் பங்கேற்று நாட்டின் 1.33 பில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அவாஸ்-தி வாய்ஸிடம் காரி மஞ்சூர் அகமது தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில், ''ஒவ்வொரு மதத்தின் நோக்கமும் ஒன்றுதான். வெறுப்பு இல்லை. இப்போட்டியில் பங்கேற்ற பிறகு, அனைத்து சமூக மக்களிடமும் வரலாறு காணாத அன்பையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறேன். 

குர்ஆனை ஓதுவதற்கு விதிகள் உள்ளன. நீங்கள் சரியான விதிகளைப் பின்பற்றி, குர்ஆனை ஓதினால், அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். என்னை வித்தியாசமான குர்ஆன் காதலன் என்று வர்ணிப்பதில் பெருமை கொள்கிறேன்.

வேதங்களை எவ்வளவு மக்கள் படிக்கிறார்களோ, அவ்வளவு அமைதியாகவும், ஞானமாகவும் மாறுவார்கள். மேலும் சமுதாயத்தில் அமைதி மற்றும் நல்லிணக்க சூழ்நிலை நிலவும்'' என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எகிப்து அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக குர்ஆன் ஓதுதல் போட்டியில் 65 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக மஞ்சூர் அகமது கலந்து கொண்டார். மூன்று கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டியில், ஒன்பது போட்டியாளர்கள் மத்தியில் மஞ்சூர் அகமது நான்காவது இடத்தைப் பிடித்தார்.

யார் இந்த சுஸ்மிதா, சுப்ரோதோ பக்சி: ஷிவ் நாடார் முதல் அசிம் பிரேம்ஜி வரை நவீன கொடை வள்ளல்கள்!!

இதற்கு முன், 2019ல், துருக்கியில் நடந்த போட்டியில், 86 நாடுகள் பங்கேற்றன. இதேபோல் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச குர்ஆன் ஓதும் போட்டியில் 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமிய கல்வியின் உலக பாரம்பரிய மையங்களில் ஒன்றான அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின், பங்களாதேஷ் கிளையில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளார் மஞ்சூர் அகமது.

அவர் அஸ்ஸாமில் தங்கி இஸ்லாமிய கல்வியை வலுப்படுத்த விரும்புவதாக அவாஸ்-தி வாய்ஸிடம் தெரிவித்துள்ளார். உயர்தர இஸ்லாமியக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாட்டிக்கு புரோபோஸ் செய்த தாத்தா; 8 நாளுக்கு பிறகு பாட்டி ஓகே சொன்னதால் திருமணத்தில் முடிந்த காதல்!

Source: Awaz The Voice