சினார் கார்ப்ஸ் என்பது இந்திய ராணுவத்தின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மிகப் பெரிய படைப்பிரிவாகும். இந்திய ராணுவத்தின் தாக்குதல்கள், சாகசங்கள் போன்றவை இந்த சினார் கார்ப்ஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்படும்.

சினால் கார்ப்ஸ் டுவிட்டர் பக்கத்தை கிட்டத்தட்ட 40 ஆயிரத்து 300 பேர் பின் தொடர்கின்றனர். பல முக்கிய தலைவர்களும், ராணுவத்தினரும் இந்த டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் நேற்று சினார் கார்ப்ஸ் இந்திய ராணுவத்தின் அதிகாப்பூர்வ பக்கம் திடீரென முடக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டணம் எழுந்த நிலையில் இன்று மீண்டும்  டுவிட்டர் பக்கம் இயங்கத் தொடங்கியது. ஆனால் சினார் கார்ப்ஸ் இந்திய ராணுவத்தின் டுவிட்டர்  பக்கம் ஏன் முடக்கப்பட்டது ? என்பதற்கான காரணத்தை டுவிட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் சதித்திட்டத்தின் காரணமாவே இது நடைபெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் வேட்யையாடப்படுவது, இந்திய ராணுவத்தின சாகசங்கள் போன்றவை இந்த டுவிட்டர் பக்கத்தில் இடம் பெறுவதால் அதைத் தடுக்கும் நோக்கத்துடன் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே இந்திய ராணுவத்தின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், டுவிட்டர் நிறுவனம் நிதானத்தை இழந்துவிட்டதா ? என கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு காரணம் யார் ? இது குறித்து யார் புகார் அளித்தனர்? டுவிட்டர் குறித்து ஆய்வு செய்து, சரியான  முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றம் ராஜீவ் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்