ஜம்முவில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. மூன்று பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. ஆபரேஷன் சிந்துர் மூலம் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஜம்முவில் பொதுமக்களை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தாக்குதலை திறம்பட முறியடித்து வருகிறது.

பாகிஸ்தான் எல்லைக் கிராமங்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வந்த நிலையில், தற்போது ஜம்மு விமான நிலையத்தின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Scroll to load tweet…

ஜம்முவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. எஃப்-16, எஃப்-17 போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்தியா முறியடித்துள்ளது. சாம்பா பகுதியிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.