இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்று வீசியுள்ள சம்பவத்தால் எல்லையோர பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2௦ ராணுவ வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
உரி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி சென்று பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தனர்.
இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது.
இதனிடையே, எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இந்து இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில், 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர் என்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது. ஆனால் இதனை பாகிஸ்தான் ராணுவம் மறுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். பலியான ராணுவ வீரரின் உடலை இழுத்துச் சென்ற பயங்கரவாதிகள் ராணுவ வீரரின் உடலை துண்டுதுண்டாக வெட்டி சிதைத்துவிட்டு எல்லைப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
