Helicopter crash:ஜம்மு காஷ்மீர் அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், . விமானிகள் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் குரேஸ் அருகே இந்திய ராணுவத்தில் பயன்படுத்திவந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் அந்த ஹெலிகாப்டர் பனி படர்ந்த பாரம் என்ற பகுதிக்குள் நுழைந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் பயணித்த வீரர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமானிகள் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த வருடம் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்க்குள் மீண்டும் இந்திய ராணுவ ஹெலிகாபடர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் இன்று காலை ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டர் பகுதியில் பறந்துக்கொண்டிருந்தது, அப்போது அதிகாலை பனி படர்ந்த பகுதிக்குள் நுழைந்தபோது, திடீரென கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.