, இந்தியப் படைகள் லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்தன.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
பஹல்காம் தாக்குதலில் இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்றைய தினம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாமை குறி வைத்து தாக்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பாகிஸ்தான் வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியது. இந்த முயற்சிகளை இந்தியா திறம்பட எதிர்கொண்டு முறியடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியது.
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு கவசத்தை தூள் தூளாக்கிய இந்தியா
இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ஆயுதப்படைகள் லாகூரில் உள்ள ஒரு முக்கிய நிலைகள் உட்பட பல இடங்கள் மற்றும் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்தன. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் உள்ள மூலோபாய ராணுவ இடங்களைக் குறிவைத்து, நேற்று இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை நேரங்களிலும் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது. ஸ்ரீநகர், பதான்கோட், அமிர்தசரஸ், லூதியானா மற்றும் சண்டிகர் ஆகியவை ரேடாரில் இருந்த இந்திய நகரங்களில் அடங்கும்.
இந்த அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்த இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு வலையமைப்பால் இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
Air Defence System at #Lahore Neutralised By India pic.twitter.com/TKpHkkuflm
— The Jaipur Dialogues (@JaipurDialogues) May 8, 2025
#WATCH | Projectile debris found in an open field in a border village of Amritsar district in Punjab pic.twitter.com/85MYeCmQ9w
— ANI (@ANI) May 8, 2025
இதற்குப் பதிலடியாக, இந்தியப் படைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன. “இன்று காலை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் உள்ள பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளைக் குறிவைத்தன. பாகிஸ்தானின் அதே தீவிரத்துடன் அதே களத்தில் இந்தியாவின் பதில் நடவடிக்கை இருந்தது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்பது நம்பத்தகுந்த வகையில் அறியப்பட்டுள்ளது,” என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பதற்றம் அதிகரிப்பு: பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
அதே நேரத்தில், பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் துப்பாக்கிச் சூட்டை அதிகரித்து, குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ராஜோரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பகுதிகளைக் குறிவைத்து மோட்டார்கள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் துயரமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு இந்தியப் படைகள் துல்லியமான பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


