Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: கல்வான் பாலத்தை கட்டி முடித்த இந்திய ராணுவம்... சீன திட்டத்தை தவிடுபொடியாக்கி சரித்திரம்!

பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கலாம் என்பது சீனாவின் திட்டம். தற்போது, கல்வான் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் இந்திய ராணுவ வாகனங்கள் ஆற்றை கடக்கவும் பிற வழிகளில் சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கவும் இந்திய ராணுவத்தால் முடியும்

Indian Army completes the galwan Bridge
Author
Ladakh, First Published Jun 20, 2020, 12:47 PM IST

லடாக்கின் ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை சீனா உரிமை கோரிவருவதால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் சீனாவுக்கே சொந்தம் என நள்ளிரவில் திருட்டுத்தனமாக சீனா அறிவித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. லடாக் எல்லையில் ஆய்வு செய்த இந்திய விமானப்படை தளபதி, கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்கள் தியாகம் வீணாகப் போகாது" எனத் தெரிவித்துள்ளார்.Indian Army completes the galwan Bridge

உண்மையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தனக்கு சொந்தமானது என சீன தூதரகம் அறிக்கை கொடுத்திருக்கிறதே தவிர இன்னும் இந்திய அரசிடமிருந்து அதற்கு மறுப்பு அறிக்கை வரவில்லை. இந்நிலையில், லடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, கல்வான் ஆற்றில் இந்திய ராணுவ வீரர்கள் புதிய பாலத்தை கட்டி முடித்து அசத்தி உள்ளனர்.

இது குறித்து, ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ’’லடாக் பகுதியில் கல்வான் ஆற்றின் மீது குறுகலான நடைபாதை இருந்தது. இதை அகற்றி 60 மீட்டர் பாலம் கட்டும் பணி இரு தினங்களுக்கு முன் முடிவடைந்தது. கல்வான் பகுதியில், இந்திய - சீன ராணுவத்தினரின் மோதலுக்கு இடையிலும் பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடந்து முடிந்துள்ளது.Indian Army completes the galwan Bridge

இந்தப்பாலத்தின் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் கல்வான் ஆற்றை எளிதாகக் கடக்க முடியும்.  தர்புக் - தவுலத் பெக் ஓல்டி வரையிலான 255 கி.மீ., சாலையை பாதுகாக்கவும், காரகோரம் கணவாய்க்கு தெற்கே கடைசியாக உள்ள ராணுவ முகாமுக்கு சுலபமாக செல்லவும் முடியும். இந்தப் பாலம், ஷையோக் - கல்வான் ஆறுகள் சந்திப்பில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. ராணுவத்தின், 14வது கண்காணிப்பு முகாம் அருகே உள்ள இந்த பகுதியில் தான், சீனா - இந்திய ராணுவத்தினரின் மோதல் நிகழ்ந்தது.Indian Army completes the galwan Bridge

கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கை முழுவதுமாக கைப்பற்றி, இந்தியாவின் எல்லையை ஷையோக் ஆற்றுடன் நிறுத்த வேண்டும் என்பதுதான் சீனாவின் திட்டம். இதன் மூலம் அங்கிருக்கும் சாலையை சொந்தமாக்கி, தவுலத் பெக் ஓல்டி உடனான இணைப்பை துண்டிக்கலாம். அங்கிருந்து முர்கோ வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கலாம் என்பது சீனாவின் திட்டம். தற்போது, கல்வான் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் இந்திய ராணுவ வாகனங்கள் ஆற்றை கடக்கவும் பிற வழிகளில் சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கவும் இந்திய ராணுவத்தால் முடியும்’’ என அவர் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios