Asianet News TamilAsianet News Tamil

பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்திய விமானப்படை!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் மற்றொரு மைல்கல்லாக பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது

Indian Air Force successful test of surface to surface version of Brahmos smp
Author
First Published Oct 11, 2023, 7:30 PM IST

இந்திய விமானப்படை (IAF) கிழக்கு கடற்பரப்பு தீவுக்கூட்டத்திற்கு அருகில் மேற்பரப்பிலிருந்து மேற்பரப்பை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஏவுகணை அதன் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

 

 

பிரம்மோஸ் ஏவுகணையின் மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பை தாக்கும் மாறுபாட்டை துல்லியமான இலக்கில் வெற்றிகரமாக சோதித்ததற்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் கூட்டுப் பங்கு நிறுவனமான இராணுவத் தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

 

 

இந்திய ஆயுதப் படைகளின் சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஆத்மநிர்பர் பாரத் நோக்கத்தின் உறுதிப்பாட்டை பிரம்மோஸ் ஏவுகணை மீண்டும் வலியுறுத்தியதாகவும் புகழாரம் சூட்டப்படுகிறது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1998ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை வடிவமைத்தல், மேம்படுத்துதல், தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு இந்த நிறுவனமே பொறுப்பாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios