இந்தியா - சீனா ஒற்றுமையாக இருந்தால்தான் பிராந்திய ஒற்றுமை வலுப்படும் என சீன துணை அதிபரை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுருத்தியுள்ளார்

வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்

அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்திய சீன கலாச்சார மேம்பாடு மற்றும் இந்திய சீன உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்

முன்னதாக சீன துணை ஜனாதிபதி  வாங்கி    ஷாவை சந்தித்துள்ள அவர், ஆசிய கண்டத்தில் இந்தியா சீனாவின் ஒற்றுமை மிக அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இந்தியா -சீனா ஒற்றுமையே பிராந்திய  ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என கூறியுள்ள ஜெய்சங்கர் 

சமீபகாலமாக நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனையின் காரணமாக சர்வதேச அளவில் நிலையற்ற  சூழல் ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்டியுள்ளார். பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் மூலம் அப்பிரச்சனைகளுக்கு முடிவுகாண முடியும் என்றும் , பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்றும் இந்தியாவின் சார்பில் தன் கருத்துகளை அவர் சீன துணை ஜனாதிபதியிடம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார்

முன்னதாக  சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டு, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்குமாறு  பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, சீனாவிடம் கோரியிருந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின்  சீன  பயணம் அதை முறியடிப்பதாக  அமைந்துள்ளது 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டத்தை ரத்து செய்த கையோடு, இந்தியா -சீனா இடையேயான இச்சந்திப்பு சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சீன பயணம் இந்திய பிரதமர் மோடி, மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் க்கும் இடையே இரண்டாவது சந்திப்புக்கு  அடித்தளமிடும் என  எதிர்பார்க்கப்படுகிறது 

முன்னதாக காஷ்மீர்  விவகாரத்தில் இந்தியாவிற்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது, அதற்கு பதிலடி கொடுத்த இந்தியா ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் அதில் வெளியாட்கள் யாரும் தலையிட தேவையில்லை என இந்தியா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.