வீட்டு வசதி திட்டம்.. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகள் - நிதியமைச்சர் கொடுத்த தகவல்!

Sri Lanka : இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகள் கட்ட இந்தியா அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

India to build 10000 more houses for estate workers in Sri Lanka says FM nirmala sitharaman ans

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் (IOT) இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் 'Nam 200' நிகழ்ச்சியில் நேற்று சிறப்புரை ஆற்றிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் முதன்மையான வளர்ச்சித் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தின் வெற்றியைப் பாராட்டி தனது உரையை ஆரம்பித்தார். 

பாஸ்போர்ட் புதுப்பிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வைரல் வீடியோ!

மேலும் இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்காக இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4ஆம் கட்டமாக மேலும் 10,000 வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய நிதியமைச்சர் "மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி, கடந்த 2017 ஆம் ஆண்டு மலையகத்தில் உள்ள அழகிய பிரதேசத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயத்தை அன்புடன் நினைவு கூர்ந்தார். இந்தியாவின் முதன்மையான அபிவிருத்தித் திட்டமான இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, மூன்றாம் கட்டத்தின் கீழ் உள்ள 4,000 வீடுகளுக்கு மேல் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 10,000 வீடுகளை காட்டுவோம் என்று அறிவித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். 

3,700 வீடுகள் ஏற்கனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று அமைச்சர் கூறினார். "NAAM 200"-ன் ஒரு பகுதியாக, இந்த திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், 10,000 வீடுகள் கொண்ட முதல் கட்டத்திற்கான அடிக்கல்லை இன்று நாட்டுகிறோம் என்றார் அவர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios