இந்தியாவை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய விவகாரம்: சுவிஸ் தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்தியா
சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மாணவர் ஒருவர் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐநா கட்டிடம் அமைந்துள்ளது. இதற்கு முன்பாக இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்திய பெண்களை வேலையாட்களாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் பற்றிய சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் உள்ள அனைத்து போஸ்டர்களும் இந்தியாவுக்கு எதிரானவை என்று அர்த்தம் கொடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இந்த நிலையில் இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. சம்மனைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் சுவிஸ் தூதர் ரால்ப் ஹெக்னர். இந்தியாவின் கவலைகளை சுவிட்சர்லாந்து அரசுக்கு தெரியப்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.
ஜெனீவாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட இடம் அனைவருக்குமான பொது இடம். அந்த விஷயத்தை சுவிஸ் அரசு ஆதரிக்கவில்லை என்று தூதர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..பெண்களுக்கு மாதம் "ஆயிரம் ரூபாய்" திட்டத்தை தொடங்கி வைத்தார் ம.பி முதல்வர் - தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா.?
இதையும் படிங்க..சிடிஆர் நிர்மல் குமாருக்கு புது "ஆப்பு".. நேற்று ராஜினாமா.! இன்னைக்கு இப்படியா.? அண்ணாமலையின் பக்கா ஸ்கெட்ச்!