ஆதித்யா எல்1 விண்கலம் ஜனவரி 6ஆம் தேதி இலக்கை எட்டும் என இஸ்ரோ தகவல்

இந்தியாவின் ஆதித்யா-எல்1 விண்கலம் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை (எல்1) ஜனவரி 6ஆம் தேதி அடையும்.

India Solar Mission Aditya-L1 To Reach Its Destination In Space On January 6: ISRO sgb

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1, பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை (எல்1) ஜனவரி 6ஆம் தேதி அடையும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.

எல் 1 புள்ளியில் இருந்து சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலமான ஆதித்யா எல்1 கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருத்து இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில், அறிவியலை பிரபலப்படுத்துவதற்காக செயல்படும் விக்ன பாரதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சோமநாத் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதித்யா எல் 1 குறித்து புதிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

"ஜனவரி 6 அன்று ஆதித்யா-எல்1 L1 புள்ளியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்"  என இஸ்ரோ தலைவர் சோம்தாத் கூறியுள்ளார்.

எல் 1 புள்ளியை அடையும் போது, ​​அது அந்தப் புள்ளியைக் கடந்து மேலும் நகராமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேறெகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்தவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை ஆய்வு செய்ய உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

"ஆதித்யா எல்1 வெற்றிகரமாக L1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டதும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அது அங்கே இருக்கும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் மிகவும் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கும். சூரியனின் இயக்கவியல் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அந்தத் தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என இஸ்ரோ தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios