உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ,  குருடன் வைரஸ் எத்தனை பேருக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கான சோதனையை உலகிலேயே குறைந்த அளவில் செய்கின்ற நாடு இந்தியாதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது .  இது இந்தியாவை மோசமான நிலைமைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ,  சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர் .  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரையில் உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ளது .  சிகிச்சை பெற்ற இரண்டு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் .

 

ஆனாலும் அமெரிக்கா , ஸ்பெயின் ,  ஈரான் உள்ளிட்ட நாடுகள் மற்ற நாடுகளை காட்டிலும்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன  ஸ்பெயினில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸின் மையமாகவே மாறி உள்ளது.  இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது .  இதுவரையில் இந்த வைரசுக்கு இந்தியாவில் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . சுமார்  68 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்த வைரசிலிருந்து  தற்காத்துக்கொள்ள ஜெர்மன் ,  தென் கொரியா ,  போன்ற நாடுகள் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்களை பரிசோதித்து அவர்களை  தனிமைப்படுத்தியதின் மூலம்,  அந்நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை வெகுவாக  தடுத்துள்ளன.   ஆனால் அமெரிக்கா இத்தாலி போன்ற நாடுகள் அதைச் செய்யத் தவறியதால் தான் ,  நோய் பாதிப்பு இந்த அளவிற்கு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .  

அதே நேரத்தில்  உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக உள்ள இந்தியா ,  மிகச் சொற்பமான அளவிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை செய்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது ,  இதுவரையில் ஒரு லட்சம் பேரிடம் கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு சுமார் 10,000 பேருக்கு மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது .  என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது இதை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ,  பல மடங்கு குறைவு என்றும் கணிக்கப்படுகிறது . குறைந்த எண்ணிக்கையில் செய்யப்படும் பரிசோதனை  மூலம் சமூகத்தில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்பது தெரியாமலேயே நோய் பலருக்கு பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது .  இந்தியா பரிசோதனையின் எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்தினால் மட்டுமே பெரும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் .