பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் பிரிடேட்டர் டிரோன்கள் வாங்க திட்டம்
பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும்போது புதிதாக பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்வது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை வாங்க இந்தியா இன்று முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் அல்லது கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்தது. அந்த ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில் நிறுத்தப்பட்டது.
இச்சூழலில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்லும்போது அமெரிக்காவின் பிரிடேட்டர் அல்லது கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் போடுவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதைப்பற்றி இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 லட்சம் வாக்குச்சாவடிகளின் பாஜக ஊழியர்கள் முன் பிரதமர் மோடி உரை
அதிக உயரத்தில் பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த டிரோன்கள் ராக்கெட்டுகளை ஏந்திச் சென்று இலக்குகளை மிகவம் துல்லியமாகத் தாக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா வருகைக்கு முன்பே இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவைத் தொடர்பு கொண்டுள்ளன. அதன்படி, பிரதமர் மோடி 21ஆம் தேதி அமெரிக்கா செல்வதற்கு முன்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவது பற்றி இந்தியா முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.
இந்தியா தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து டிரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த டிரோன்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.
ரஷ்யா - உக்ரைன் போருடன் ஒப்பிட்டு மம்தா அரசை விமர்சித்த பாஜக தலைவர் அக்னிமித்ரா