Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: நிமிஷத்துக்கு 60 குண்டு பொழியும் பீஷ்மா பீரங்கிகள் ரெடி.. லடாக் எல்லையில் நிறுத்திய இந்தியா.!

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் சக்திவாய்ந்த பீரங்கிகளை எல்லையில் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

India sent a powerful  T-90 Bhishma tank to the Ladakh border
Author
Ladakh, First Published Jun 25, 2020, 12:28 PM IST

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் சக்திவாய்ந்த பீரங்கிகளை எல்லையில் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லடாக்கில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும் - இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்குமிடையில் உண்டான பேச்சுவார்த்தையின் படி, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது.

India sent a powerful  T-90 Bhishma tank to the Ladakh border

இந்நிலையில், சில நாட்களாக சீனா தனது ராணுவத்தை எல்லைப்பகுதியில் குவித்து வருவதாக சாட்டிலைட் படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராணுவ ரீதியிலான பேச்சு வார்த்தைக்கு பிறகு எல்லைப்பகுதியிலிருந்து இரு நாட்டு வீரர்களும் பின்வாங்கிய பிறகு சீனா மீண்டும் படைகளை குவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

India sent a powerful  T-90 Bhishma tank to the Ladakh border

இந்நிலையில் சீனா அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் உள்ளது. இந்தியா தனது சக்தி வாய்ந்த T-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லைக்கு நகர்த்தியுள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது. ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும்.

India sent a powerful  T-90 Bhishma tank to the Ladakh border

6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கக்கூடியதுமாகும். சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கையாக இந்த மாதத்தின் தொடக்கம் முதலே இந்த பீரங்கியை எல்லைக்கு அருகே நிறுத்தியுள்ள இந்திய ராணுவம் எல்லையில் எந்த அத்துமீறலையும் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளது. சீனாவிடமும் இந்த பீரங்கிக்கு நிகராக டி 95 பீரங்கிகள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி 90 பீரங்கிகள் உள்ளன. சீனாவிடம் 3500 பீரங்கிகள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இரு நாட்டு எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios