Asianet News TamilAsianet News Tamil

உச்சக்கட்ட பாய்ச்சலில் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு கிடுகிடு உயர்வு.. இத்தாலியை நெருங்கும் இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770ஆக உயர்ந்துள்ளது.

India rise to 2.26 lakh, 9,851 new cases in last 24 hours
Author
Maharashtra, First Published Jun 5, 2020, 10:54 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் இன்று காலை நிலவரப்படி  இந்தியாவில் மொத்தம் 2,26,770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 9,851 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,348 ஆக உயர்ந்துள்ளது.

India rise to 2.26 lakh, 9,851 new cases in last 24 hours

இதுவரை 1,09,462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,10,960 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

India rise to 2.26 lakh, 9,851 new cases in last 24 hours

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 77,793 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 33,681 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,710 பேர் உயிரிழந்துள்ளனர்.  27,256  பாதிப்புடன் தமிழகம் 2வது இடத்திலும்,  25,004 பாதிப்புடன் டெல்லி 3வது இடத்திலும் உள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா 6வது இடத்திற்கு முன்னேற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios