Coronavirus: கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா.. ஜெட் வேகத்தில் உயரும் பாதிப்பால் அலறும் பொதுமக்கள்..!
இந்தியாவில் ஒமிக்ரான் எனும் திரிபு பரவ ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தையும், ஒமிக்ரான் பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 3,73,80,253 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் எனும் திரிபு பரவ ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தையும், ஒமிக்ரான் பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,58,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு3,73,80,253 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2.71 லட்சமாக இருந்த நிலையில், நேற்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று 385 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 451 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 1,51,740 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,52,37,461-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது சிகிச்சை எடுத்துவருவோரின் எண்ணிக்கை 16,56,341-ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை 157.20 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 39,46,348 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 8,209 ஆக உயர்ந்தது.