Asianet News TamilAsianet News Tamil

பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்... ஒரே நாளில் ஒரு லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.. அலறும் மத்திய அரசு..!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. 

India records daily jump of 96,551 Covid cases
Author
Tamil Nadu, First Published Sep 11, 2020, 11:01 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது. 

India records daily jump of 96,551 Covid cases

இந்நிலையில்,  இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 96,550 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,62,414ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,209 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 76,271ஆக உயர்ந்துள்ளது.

India records daily jump of 96,551 Covid cases

அதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,42,664ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 70,880  பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,43,480 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  உயிரிழப்பு 1.67 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 77.65 சதவீதமாகவும் உள்ளது.

India records daily jump of 96,551 Covid cases

இதனிடையே, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 11,63,542 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து மொத்த மாதிரிகளின் பரிசோதனை 5,40,97,975 ஆக அதிகரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios