இந்தியா மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் கொடுக்க பாகிஸ்தான் சீனாவின் ஆதரவை நாடி உள்ள நிலையில் அதை முறியடிக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சீனா விரைகிறார் 

காஷ்மீர்  விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியாவின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டியுள்ளது அது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்   வாங்-யியை நேரில் சந்தித்து  ஐநா காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் மீது புகார் அளிக்க தங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என கோரியிருந்தார் ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டதாக தெரிகிறது,  இருந்தாலும் சீனாவும் பாகிஸ்தானும் பல விவகாரங்களில் தொடர்ந்து நட்பு காட்டி வருவதால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா எந்த நிலையிலும் ஆதரவு அளித்து விடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது.

 எனவே பாகிஸ்தானின் முயற்ச்சியை முறியடிக்கும் நோக்கில், சீன வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சீனா விரைகிறார் மூன்று நாள் பயணமாக இது இருக்கும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 சீனாவில் நடைபெறும் இந்திய சீன உயர்நிலை செயல்பாடுகள் தொடர்பான மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து இந்திய சீன கலாச்சார பரிவர்த்தனைகள் தொடர்பாக சீன அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர்   வாங்-யீயுடன் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீர் விவகாரத்தை துருப்புச் சீட்டாக வைத்து ஆசிய கண்டத்தில்  உள்ள நாடுகளை இந்தியாவுக்கு எதிராக அணி திரட்டவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் மீது புகார் கொடுக்கவும் பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தேல்வியில் முடிந்துள்ளது.