கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை பெருமையுடன் அங்கீகரிக்கும் இந்தியா: பிரதமர் மோடி!
கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
புனிதர் இயேசுநாதரின் பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னதமான போதனைகளை மக்கள் நினைவுகூர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவ சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், இந்திய சமூகத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் சேவை உணர்வை வழங்குவதில் கிறிஸ்தவ சமூகத்தின் பங்கினை பாராட்டினார். கிறிஸ்தவர்களுடனான தனது பழைய, நெருக்கமான மற்றும் அன்பான உறவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகத்தினர் எப்போதும் முன்னணியில் இருப்பதாக கூறினார்.
சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் கிறிஸ்தவ சமூகத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து பெரிய பங்களிப்பைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை இரக்கம் மற்றும் சேவையை மையமாகக் கொண்டது என்றும், அனைவருக்கும் நீதி கிடைக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்திற்காக அவர் பணியாற்றினார் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கிடைத்ததன் பின்னணி என்ன?
இந்த மதிப்புகள் தனது அரசாங்கத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றன. ஹிந்தி தத்துவத்தின் ஊற்றுமூலமாக உபநிடதங்கள் கருதப்பட்டாலும் பைபிள் போன்றவை செல்லும் கருத்துக்களிலும் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் கூறினார். ஒத்துழைப்பு, ஒற்றுமை உணர்வோடு இணைந்து நாட்டை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும் அப்போது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.