நாட்டிற்குள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில்  முப்படைகளையும் நவீனபடுத்தும் முயற்ச்சியில் இந்தியா இறங்கியுள்ளது, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை படையில் இணைக்க  திட்டமிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட நாடுகள் இந்திய எல்லையில் அத்துமீறி வருகிறது , காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, அமெரிக்காவும் அடிக்கடி காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முயற்சிசெய்து  இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்துவருகிறது.  ரஷ்யா, ,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மட்டும்  இந்தியாவிற்கு வெளிப்படையான ஆதரவு வழங்கியுள்ளன. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தை  சீனா உதவியுடன் இணைந்து பாகிஸ்தான் ஐநா மனித உரிமை கவுன்சில் வரை கொண்டு சென்று சர்வதேச பிரச்சனையாக்க முயற்ச்சி வருகிறது. ஆனால் தனக்கே உரிய ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் அப்பிரச்சனைகளை இந்தியா சமாளித்து வருகிறது. 

இருந்த போதிலும் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத நாடுகள் சீனா, பாகிஸ்தான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவிற்கு எதிராக களம் இறங்கும் பட்சத்தில் அதை சமாளிக்கும் வலிமை நமக்கு தேவை என்பதை உணர்ந்து இந்தியா முப்டைகளையும் பலப்படுத்தும்  நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதற்காக 9.34 லட்சம் கோடி ரூபாயையும் நிதி ஒதுக்கி திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதாவது படையில் உள்ள பழைய தளவாடங்களை நீக்கிவிட்டு புதியரக விமானங்கள், ஏவுகணைகள், ஆள்இல்லா கண்காணிப்பு சாதனங்கள் போன்றவற்றை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

போர் விமானங்களை வெளிநாடுகளில் இருந்து கொள் முதல் செய்வதை தவிர்த்து உள்நாட்டிலேயை உற்பத்தி செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, எதிரிகளை இலகுவாக தாக்கக்கூடிய விமானப்படையை வலிமையானதாக்க திட்டமிடப்பட்டுவருகிறது. அக்னி ஏவுகணையை படையில் சேர்ப்பது அதில் முக்கிய திட்டமாகும்.  படையில் புதிதாக இணைக்கப்பட உள்ள ஏவுகணை சுமார் 5000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்ககூடியது.  தற்போது அமெரிக்கா, சினா , ரஷ்யா, பிரான்ஸ் வட கொரியாவிடம் மட்டுமே இந்த வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெற உள்ளது.

தற்போது இந்தியாவில் 700 கிலோ மிட்டர் முதல் 3.500 கிலே மீட்டர் பாயும் அக்னி ஏவுகணைகள் மட்டுமே இருந்துவருவது குறிப்பிடதக்கது. அத்துடன் 132 கப்பல்கள் 220 விமானங்கள். 15 நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே உள்ள நிலையில்  அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 200 கப்பல்கள் ,500 விமானங்கள் 24 நீர் மூழ்கி கப்பல்கள் கொண்ட அதிவலிமை மிக்க படையாக இந்தியா திகழும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெருமிதம்  தெரிவிக்கின்றனர்.