சிறப்பு அதிரடி படையினரை பயன்படுத்தி 2-ம் கட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் திட்டத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயுதங்கள், போர் விமானங்கள், விமானம் தாங்கி கப்பல்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்டதுபோல, 2-ம் கட்டமாக மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இதில், கமாண்டோ அதிரடி படையினர், சிறப்பு அதிரடி படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்திட்டத்திற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.


இதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. 300 கோடி ரூபாய் செலவில் புதிய துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்றவை கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும், கடலோர காவல்படைக்கு என 6 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. எனினும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
