India is top no1 in the list of corrupt countries
ஊழல் அதிகரித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால், மோடி தலைமையிலான பாஜக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதும், இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவேன் என கூறினார். மேலும், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை விரைவில் மீட்டு கொண்டு வருவேன் என உறுதியளித்தார்.
இந்நிலையில், ஆசிய கண்டத்தில் ஊழல் மிகவும் மலிந்துள்ள நாடுகளின் பட்டியலை டிரான்பரன்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், உலக நாடுகளில் குறிப்பாக ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் ஊழல் அதிகம் உள்ள நாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது.
அதில், இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தியார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மோடி தலைமையிலான அரசு திறம்பட நடப்பதாக கூறியுள்ளனர் என கூறியுள்ளது.
இதுகுறித்து டரான்பரன்சி இன்டர்நேஷனர் நிறுவனம், ஆசிய கண்டத்தில் அதிக ஊழல் மலிந்துள்ள நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை மக்கள் மற்றும் ஊழல் - ஆசிய பசிபிக் - குளோபல் ஊழல் பாரோமீட்டர் என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டது. அதில், கூறியிருப்பதாவது:-
கடந்த 2015ம் ஆண்டு ஜூலை முதல் 2017ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்ற அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. அதில், ஊழல் பட்டியலில் இந்தியா (69 சதவீதம்) முதலிடத்திலும், ஜப்பான் (0.2 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளது.
இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, தென்கொரியா நாடு, ஊழல் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
