சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இந்தியா; சொல்லியே சாதித்தார் பிரதமர் மோடி!!
MyGovIndia தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 89.5 மில்லியன் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்தும் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலக நாடுகளுடன் 2022 ஆம் ஆண்டில் நடந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மட்டும் 46% நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐந்து நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் இடம் பெறுகிறது. பிரேசிலில் 29.2 மில்லியன் அளவிற்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது. சீனா 17.6 மில்லியன் பண பரிவர்த்தனைகளுடன் மூன்றாம் இடத்திலும், தாய்லாந்து 16.5 மில்லியன் பண பரிவர்த்தனைகளுடன் நான்காம் இடத்திலும், தென்கொரியா 8 மில்லியன் பண பரிவர்த்தனைகளுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.
உங்கள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரும்.. மத்திய அரசு அனுப்பும் பணம்! முழு விபரம் உள்ளே
MyGovIndia என்ற இணையதளம் மத்திய அரசின் கீழ் வருகிறது. மக்கள் இந்த இனையத்தில் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம். இந்தியா டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாடாக மாறி வருகிறது என்று பிரதமர் மோடி நடப்பாண்டின் துவக்கத்தில் கூறி இருந்தார். கிராமப்புற பொருளாதாரமும் மாறி வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் பிரதமர் மோடி பேசுகையில், ''டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில்தான் மொபைல் டேட்டாவும் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இன்று கிராமப்புற பொருளாதாரம் பெரிய அளவில் மாறி வருகிறது'' என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் ஆர்பிஐ குறிப்பிட்ட இருந்த செய்தியிலும், இந்தியாவில் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது, இது பொருளாதாரத்தில் பிரதிபலித்து வருகிறது. மதிப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் அளவில் மைல்கல்லை எட்டியுள்ளது என்று தெரிவித்து இருந்தது.