india is a hindu country said rss chief
இந்தியா இந்துக்களின் நாடு; ஆனால் அதற்காக மற்றவர்களுக்கான நாடு இல்லை என்று அர்த்தமாகாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலுள்ள கல்லூரி மாணவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத், இந்த கருத்தை தெரிவித்தார்.
ஜெர்மனியார்களின் நாடு ஜெர்மனி, அமெரிக்கர்களின் நாடு அமெரிக்கா. அதுபோல இந்துக்களின் நாடு இந்தியா. இந்தியா இந்துக்களின் நாடு என்பதால் மற்றவர்களுக்கானது இல்லை என்று அர்த்தமில்லை. ”இந்து” என்ற வார்த்தைக்குள் பாரத தாயின் பிள்ளைகளும் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றிய மூதாதையர்களின் சந்ததியினரும் அடக்கம்.
எந்த ஒரு தனிநபராலும் அரசாங்கத்தாலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியாது. அதற்கு சமூகம் ஒத்துழைக்க வேண்டும். சமூகம் மாற்றத்தை அடையும்போது அரசாங்கத்திலும் அரசாங்க அமைப்புகளிலும் மாற்றம் தானாக நேரும்.
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
