மறுபடியுமா! சர்வதேச விமானச் சேவைக்கான தடை நீட்டிப்பு: மத்திய அரசு திடீர் முடிவு

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவிட்டபோதிலும், சர்வதேச பயணிகள் விமானச் சேவையை தொடங்காமல் மறுஉத்தரவுவரும்வரை நிறுத்திவைப்பதாக மத்திய விமானப்போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

India International flights to remain suspended till further orders

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவிட்டபோதிலும், சர்வதேச பயணிகள் விமானச் சேவையை தொடங்காமல் மறுஉத்தரவுவரும்வரை நிறுத்திவைப்பதாக மத்திய விமானப்போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தடை நீட்டிக்கப்பட்டதற்கான காரணம் என்ன, உக்ரேன்-ரஷ்யப் போர் காரணமா என்பதற்கான எந்த விளக்கத்தையும் மத்திய விமானப்போக்குவரத்து துறை இயக்குநரகம் தெரிவிக்கவில்லை. 

India International flights to remain suspended till further orders

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது முதல் கடந்த 2020, மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 35 நாடுகளுடன் பயோ-பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு விமானப் போக்குவரத்து சேவையை செயல்படுத்தி வருகிறது.

கடந்த  ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இதேபோன்று முழுமையான கட்டுப்பாடில்லா விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது, அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவல் குறைந்ததையடுத்து,  அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடில்லா சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்தை மார்ச் மாதம் மத்திய அரசு தொடங்கலாம் எனத் தகவல்கள் வெளியானது.

India International flights to remain suspended till further orders

 சமீபத்தில் சர்வதேச விமானப் பயணத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை திருத்தி வெளியிட்டது. அதில் எச்சரிக்கைப் பட்டியலில் உள்ளநாடுகள் எனும் பகுதி நீக்கப்பட்டன. இதனால் மார்ச் மாதம் தடையில்லா பயணிகள் விமானச் சேவை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இயல்பான வர்த்தகரீதியான விமானப் போக்குவரத்து 2022,பிப்ரவரி 28ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மறு உத்தரவு வரும்வரை இப்போதுள்ள நிலையே நீடிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India International flights to remain suspended till further orders

இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துறை இயக்குநரகம் ட்விட்டரில் வெளியிட்டபதிவில் “ சர்வதேச பயணிகள் விமானச் சேவை மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த தடை சர்வதேச சரக்குப்போக்குவரத்துக்கு பொருந்தாது. அதேபோல இந்தியவிமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கும் பொருந்தாது.

நாடுகளுக்கு இடையே- பயோ-பபுள் பபுள் முறையில் இயக்கப்படும் விமானச் சேவை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios