Asianet News TamilAsianet News Tamil

36 மணிநேரம் வானில் வட்டமிடும் ஹெரோன் மார்க் 2 ட்ரோன்கள்! சீனா, பாகிஸ்தான் எல்லையில் வலுவடையும் கண்காணிப்பு!

ஹெரான் மார்க்- 2 ட்ரோன்களை இயக்கும் விமானப்படையின் பிரிவு 'வார்டன் ஆஃப் நார்த்' (வடக்கின் காவலன்) என்று அழைக்கப்படுகிறது.

India inducts new Heron Mark-2 drones, can stay in the air for 36 hours and surveil both Pakistan and China borders in one go
Author
First Published Aug 14, 2023, 6:00 PM IST

இந்திய விமானப்படை நான்கு புதிய ஹெரான் மார்க்-2 ட்ரோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள விமானப்படை தளத்தில் இந்த ட்ரோன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தாக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன்கள் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஆற்றல் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெரான் மார்க்- 2 ட்ரோன்களை இயக்கும் விமானப்படையின் பிரிவு 'வார்டன் ஆஃப் நார்த்' (வடக்கின் காவலன்) என்று அழைக்கப்படுகிறது. இவை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனான எல்லையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆயுதப்படைகளில் மிகவும் மேம்பட்ட இந்த ட்ரோன்கள் செயற்கைக்கோள் இணைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.

விந்தியகிரி போர்க்கப்பலை ஆக. 17இல் கடற்படைக்கு அர்ப்பணிக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

மிகவும் திறமையான ஹெரான் மார்க் 2 ட்ரோன்கள் நீண்ட நேரம் விண்வெளியில் உலவும் திறன் கொண்டவை. இதன் மூலம், நம் பார்வைக்கு அப்பால் உள்ள இடங்களையும் கண்காணிக்கலாம் எனவும் முழு நாட்டையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும் எனவும் ட்ரோன் படையின் கமாண்ட் அதிகாரி, விங் கமாண்டர் பங்கஜ் ராணா தெரிவித்துள்ளார்.

India inducts new Heron Mark-2 drones, can stay in the air for 36 hours and surveil both Pakistan and China borders in one go

ஹெரான் மார்க் 2 ட்ரோன்கள் மிக நீண்ட தூரத்தில் 36 மணிநேரம் வரை தொடர்ச்சியாக செயல்பட முடியும். எனவே, இந்த ட்ரோன்கள் மூலம் இலக்குகளை 24 மணிநேரமும் இடைவிடமால் கண்காணிக்க முடியும். ஹெரான் மார்க்-2 ட்ரோன்களின் தனித்துவமான அம்சம், ஸ்டான்டாஃப் திறனைச் செயல்படுத்தும் திறன். அதாவது நவீன சென்சார்களைக் கொண்டு எல்லைகளைக் கடக்காமல் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து உளவுத் தகவல்களைச் சேகரிக்க முடியும்.

நவீன ஏவியோனிக்ஸ் மற்றும் என்ஜின்கள் விமானத்தின் செயல்பாட்டு உச்சவரம்பு அதிகரிக்கப்படுவதை உறுதி செய்துள்ளன. இது 35,000 அடி உயரத்தையும், 150 நாட்ஸ் வேகத்தையும் எட்டும். போர் விமானங்கள் நீண்ட தூரத்தில் உள்ள எதிரி இலக்குகளை எளிதாக அழிக்க உதவும் வகையில் ஹெரான் மார்க் 2 அந்த இலக்குகளை லேசர் ஒளியில் அடையாளம் காட்டும்.

இந்த ட்ரோன்கள் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே இருக்கும் வானிலையிலும் செயல்பட முடியும். இந்த ட்ரோன்களில் ஆயுதங்களைப் பொருத்தும் வசதியும் உள்ளது. தேவையான தருணத்தில் இந்த ட்ரோன்களை ஆயுதமாக்கியும் பயன்படுத்தலாம்.
வானில் இருந்து தரையைத் தாக்கும் ஏவுகணைகள், வான் வழியாக தரையில் உள்ள பீரங்கிகளைத் தாக்கும்  ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை இந்த ஹெரான் மார்க்-2 ட்ரோன்களில் பொருத்த முடியும்.

பீகாரில் நர்ஸ் கூட்டு பலாத்காரம்... கொலை செய்து ஆம்புலன்சில் மறைத்து வைத்த மருத்துவர்

Follow Us:
Download App:
  • android
  • ios