காலநிலை மாற்றச் செயல்பாடுகளில் இந்தியா முன்னோடியாக உள்ளது: பிரதமர் மோடி கருத்து
காலநிலை மாற்ற நடவடிக்கையில் இந்தியா எப்போதும் முன்னிலையில் உள்ளது என்றும், G20 மாநாட்டின்போதும் காலநிலைக்கு மாற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
COP28 உலக காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்பட்டிருக்கிறார். துபாய் பயணத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காலநிலை மாற்ற நடவடிக்கையில் இந்தியா எப்போதும் முன்னிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
G20 மாநாட்டின்போதும் காலநிலைக்கு மாற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று கூறிய அவர், G20 மாநாட்டின் டெல்லி பிரகடனத்தில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உறுதியான நடவடிக்கைகளும் அடங்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
"காலநிலை மாற்ற நடவடிக்கைக்கு இந்தியா முன்னோடியாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காடு வளர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் நமது சாதனைகள் பூமியின் மீதான நமது அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
விமானப்படைக்கு கூடுதல் போர் விமானங்கள் வாங்க 1.1 லட்சம் கோடி! பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்!
"இந்தியா எப்போதும் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜி20 மாநாட்டுக்குத் தலைமை ஏற்ற காலத்தில், காலநிலை மாற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது" என்றும் பிரதமர் கூறுகிறார்.
COP28 மாநாடு பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைக்கு பாதையை உருவாக்குவதற்கும் வாய்ப்பு அளிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
COP28 மாநாடு துபாயில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்துகொள்வார். பிரதமர் மோடி உள்பட கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார்கள்.
பிரதமர் மோடி முன்னதாக 2021 இல் நடந்த கிளாஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவர் காலநிலை மாற்றத்தை சமாளிக்க 'பஞ்சாமிர்தம்' என்ற இந்தியாவின் ஐந்து அம்ச திட்டத்தை முன்வைத்தார்.
மிரட்டலான என்ட்ரி கொடுத்த டாடா டெக்! முதல் நாளே பங்கு விலை 180% சதவீதம் உயர்வு!