போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் இந்தியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் தயாராக உள்ளது. பதிலடி கொடுத்தும் வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் பாகிஸ்தான் எல்லை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் இந்திய ராணுவத்தினருக்கு எல்லை பாதுகாப்பு படையினருக்கும் அதி நவீன ரக துப்பாக்கிகளை வழங்கி இருக்கிறது. இந்தியா இந்த துப்பாக்கிகளைக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் வரை இலக்கை நிர்ணயித்து எதிரிகளை வீழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து இந்த ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளதால் இனி எல்லை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கும் இந்தியா என்பதை உணர்த்துகிறது