மூக்கு வழியே செலுத்தப்படும் முதல் கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு ஒப்புதல் !
ஊசிக்கு பதிலாக மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டது.
அப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்தது. ஆரம்ப கட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.பிறகு 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ராகுல் காந்தி நடைபயணம்; 2024ல் தரமான சம்பவத்துக்கு தயாரான 3 முதல்வர்கள்.. ஸ்டாலினும் இருக்காரு! திகிலில் பாஜக
2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து தற்போது பூஸ்டர் எனும் மூன்றாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. மூக்கு வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு தற்போது அவசரக் கால ஒப்புதல் கிடைத்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ChAd36-SARS-CoV-S COVID-19 (Chimpanzee Adenovirus Vectored) மூக்கு வழி அளிக்கும் மருந்து கொரோனாவிற்கு எதிராகப் போராடும் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இந்த வகை தடுப்பு மருந்து 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கடைசியில் 132 கி.மீ வேகம்.. சைரஸ் மிஸ்திரி இறப்புக்கு இந்த பெண் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
மூக்கு வழியே செலுத்தும் நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு (DCGI) அனுமதி அளித்துள்ளது. பிபிவி 154 என்ற பெயர் கொண்ட தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கான இந்தியாவின் முதல் நாசி தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..முதலிரவில் மனைவிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுத்த கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!