முதலிரவில் மனைவிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுத்த கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

திருமணம் நடைபெற்ற பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

the groom gave the bride a virginity test on the first night

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. அங்கு பில்வாரா நகரத்தில் 24 வயதுள்ள பெண் ஒருவருக்கு கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. அந்த குடும்பத்தினர் வழக்கப்படி திருமணம் ஆன பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை எடுப்பது வழக்கமான ஒன்றாகும். 

இந்த திருமணத்திற்குப் பிறகு அவர்களின் குக்டி மரபின்படி, அப்பெண்ணுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளனர். அவர் அந்தச் சோதனையில், தன்னுடைய கன்னித்தன்மையை இழந்துள்ளார் என்று சோதனை முடிவு கிடைத்துள்ளது. சோதனையில் கன்னித்தன்மையை நிரூபிக்கத் தவறியதால், மாப்பிள்ளை வீட்டார், அந்த பெண்ணை அடித்துத் துன்புறுத்தி விசாரித்துள்ளனர். 

the groom gave the bride a virginity test on the first night

மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

அப்போது அந்தப் பெண் தன்னுடைய அண்டை வீட்டாரால், தான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதையும், இது குறித்து சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதையும் கூறினார். இந்த பிரச்னையை பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் மாப்பிள்ளை வீட்டார் கொண்டுசென்றுள்ளனர். கன்னித்தன்மையை இழந்த அந்தப் பெண்ணை புனிதமாக்க புது உத்தரவை போட்டனர். 

10 லட்சம் ரூபாயை அபராதமாகக் கொடுக்க வேண்டும் என அக்குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, அப்பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர், மாமியார், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது புகார் அளித்தார். காவல் துறையினர் பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ராகுல் காந்தி நடைபயணம்; 2024ல் தரமான சம்பவத்துக்கு தயாரான 3 முதல்வர்கள்.. ஸ்டாலினும் இருக்காரு! திகிலில் பாஜக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios