Asianet News TamilAsianet News Tamil

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்… பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமரும் இணைந்து அடிக்கல் நாட்டினர்..!

India first Bullet Train project flagged off by PM Modi and Shinzo Abe
 India first Bullet Train project flagged off by PM Modi and Shinzo Abe
Author
First Published Sep 14, 2017, 10:59 AM IST


இந்தியாவிலேயே முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

வளர்ந்த நாடுகளில் உள்ள சேவையைப் போலவே இந்தியாவிலும் பல்வேறு வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கும் இடையே ஜப்பா.ன் நாட்டின் உதவியுடன் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

ரூ.1.10 லட்சம் கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டத்திற்கு ஜப்பான் 88 ஆயிரம் கோடி ரூபாய் கடனை 0.1% என்ற குறைந்த வட்டியில் வழங்குகிறது. 

மும்பை அகமதாபாத் இடையேயான 508 கி,மீ தொலைவில் 468 கி.மீ உயர்மட்ட பாதையாகவும் 27 கி.மீ சுரங்கப்பாதையாகவும் 7 கி.மீ தொலைவிற்கு கடலுக்கு அடியிலும் ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்த அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் மும்பை-அகமதாபாத் இடையேயான பயண நேரம் 8 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக குறையும்.

இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அகமதாபாத்தில் நடந்து வருகிறது. பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இணைந்து புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios