Asianet News TamilAsianet News Tamil

மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை திறம்பட கையாளும் இந்தியா… சொதப்பும் அமெரிக்கா!!

உக்ரைனில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா பின் தங்கியுள்ள நிலையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

India effectively deal with saving people from ukraine
Author
India, First Published Feb 28, 2022, 7:45 PM IST

உக்ரைனில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா பின் தங்கியுள்ள நிலையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக வெளிநாட்டு தூதரகங்கள் மீட்டு வருகின்றனர். அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன.

India effectively deal with saving people from ukraine

மேலும், இரவு, பகல் பாராமல் வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை தாங்களே காத்துக்கொள்ளுங்கள் என்று மத்திய அரசு விட்டுவிட்டதாக ஒரு பிரிவினர் விமர்சித்துள்ளனர். அவர்களுக்கு உண்மை நிலவரத்தை காட்ட உள்ளது இந்த செய்தித்தொகுப்பு… இந்தியாவின் ஆபரேஷன் கங்கா தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா தனது குடிமக்களுக்கு என்ன சொல்லியிருக்கிறது என்பதை பார்ப்போம். ரஷ்யா-உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, அதன் சமீபத்திய ஆலோசனையில், உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டவரை வெளியேற்ற முடியாது என்று தனது குடிமக்களிடம் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதே இடத்தில் இந்திய அரசு, இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி அரசு, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதர்களாக நான்கு உயர்மட்ட அமைச்சர்களை அனுப்பியுள்ளது. இந்த அமைச்சர்களில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் அடங்குவர். அவர் ருமேனியா மற்றும் மால்டோவா வழியாக வெளியேற்றத்தை ஒருங்கிணைப்பார். அதேபோல் ஸ்லோவாக்கியா செல்லும் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஹங்கேரிக்குச் செல்கிறார், சாலை போக்குவரத்துத்துறை ஜெனரல் VK.சிங், போலந்து வழியாக வெளியேற்றத்தை ஒருங்கிணைப்பார். அடுத்த 24 மணி நேரத்தில், புக்கரெஸ்டில் இருந்து இரண்டு மற்றும் புடாபெஸ்டில் இருந்து ஒன்று உட்பட மூன்று விமானங்கள் இந்தியாவிற்கு புறப்பட உள்ளன.

India effectively deal with saving people from ukraine

இதில் இரண்டு விமானங்கள் டெல்லியிலும், ஒன்று மும்பைக்கு வரும். இந்தியாவின் நடவடிக்கை மிக தீவிரமாக உள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். மற்றொரு உதாரணம். இந்தியாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் ஆலோசனைகள் தங்கள் குடிமக்களுக்கு மிகவும் குறைவாகவே உதவியாக உள்ளன. அமெரிக்கத் தூதரகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, உக்ரைனில் உள்ள தங்களது குடிமக்களை பாதுகாப்பான தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி வெளியேறுமாறு தெரிவித்துள்ளது. இந்த இடத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்துள்ள சமீபத்திய ஆலோசனையுடன் இதை ஒப்பிடுகையில், உக்ரேனியர்கள், குடிமக்கள் மற்றும் அதிகாரிகள் இருவரும் இந்திய குடிமக்களை வெளியேற்றுவதில் குறிப்பிடத்தக்க வகையில் ஆதரவளித்து வருவதாகக் கூறும்போது, அனைத்து இந்திய நாடுகளும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்குமாறு நாங்கள் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவுரை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் கீவ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் இந்தியர்கள் பொறுமையாக நடந்துக்கொள்ள வேண்டும். ரயில் நிலையங்களில் ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்த வேண்டாம். சிறப்பு ரயில்கள் இலவசமாக இயக்கப்படும் வரை பொறுமையாக காத்திருக்கவும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. இவ்வாறு வெளியேற்றும் நடவடிக்கையை இந்திய அரசு எவ்வளவு திறம்பட கையாண்டது என்பதற்கு இன்னும் ஆதாரம் வேண்டுமா? என்று விமர்சகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளது இந்தியா. 

Follow Us:
Download App:
  • android
  • ios