புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளையும் வேட்டையாடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தது இந்தியா. அப்போது புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மீது தாக்குதல் நடத்தி 300 க்கும் மேற்பட்டோரை கொன்றது. மீதமுள்ள சிலரை தேடி அழிக்கும் பணியில் இறங்கியது இந்தியா.

இதில் மிக முக்கியமானவர்களான கமாண்டர்கள் முகமது உமர், உஸ்மாயின் இப்ராகிம் என்ற இருவரையும் கூட சுட்டு வீழ்த்தப்பட்டாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த வருடம் மட்டும் காஷ்மீரில் 66 பயங்கரவாதிகளை கொன்று உள்ளது இந்தியா. அவர்களில் 27 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். அதில் 16 பேர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு கொல்லப்பட்டனர். அதன் பிறகு எஞ்சி இருந்த பல முக்கிய பயங்கரவாதிகளையும் இன்று கொல்லப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.