நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,451 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,380 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 2,451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,451 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,380 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 2,451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,451 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,52,425ஆக உயர்ந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 1,589 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 1,231 பேர் குணமடைந்த நிலயில் இன்று 1,589 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,16,068 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உள்ளது. 

தற்போது கொரோனா பாதிப்பினால் 14,241 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03 % ஆக குறைந்துள்ளது. தினசரி தொற்று பரவல் விகிதம் 0.5 5% ஆகவும் வாராந்திர தொற்று பரவல் விகிதம் 0.47% ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனாவிற்கு 56 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 54 பேர் பலியாகியுள்ளனர். 

இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,22,116 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 187.26 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,03,588 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 83,38,25,991 கோடி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,48,939 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.