முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என 73 ஆவது சுதந்திர தின உரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நாட்டின் 73 வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கொடியேற்றத்துடன் கோலாகளமாக கொண்டாடப்பட்டுவருகிறது, இரண்டாவது முறையாக பிரதமர் பதிவியேற்றுள்ள மோடி முதல் சுதந்திர தின விழா கொடியேற்றியுள்ளார். காலை 8 மணிக்கு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், கார் மூலம் செங்கோட்டையடைந்த அவர் முப்படைகளின் இராணுவ அணிவக்குப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார், செங்கோட்டையில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் மூவர்ணதேசியகொடியை ஏற்றிவைத்து பின் உரையாற்றினார் மோடி, அப்போது பேசிய அவர்,நாட்டில் வளர்ச்சிக்காக தாம் கொண்டுவந்துள்ள திட்டங்கள் பட்டியலிட்டார், நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாக வாழவேண்டும் எனில் பாதுகாப்பு அவசியம் என்றார், எனவே அப் பாதுகாப்புத்துறையை வலிமை மிக்கதாக்க,தற்போது 

ராணுவம், கடற்படை, விமானப்படை, என தனித்தனி தளபதிகளின் கீழ் செயல்பட்டுவரும் முப்படைகளும் ஒற்றைத்தலைமையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார், chief of defense staff என்ற பெயரில் உருவாக்கப்படும் பதவியில் ஒரு தளபதி நியமிக்கப்படுவார் என்றும் அவரே பாதுகாப்பு தொடர்பாக முடிவுகளை வெளியிடுவார் என்றும்  பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

நிர்வாக வசதிக்காகவும், உடனுக்குடன் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் முப்படைகளும் ஒற்றைத்தலைமையின் கீழ் கொண்டுவரப்படுகிறது என்றும் அதற்காக காரணத்தை பிரதமர் மோடி கூறினார்.இந்திய சீனா,இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் அடிக்கடி நடக்கும்  அத்துமீறல்களை முறியடிக்கவும் தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கவுமே இந்த யுக்தி கையிலெடுக்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார்.அடிக்கடி எல்லையில் வாலாட்டும் சினா ,பாகிஸ்தான் போன்ற எதிரிநாடுகள் மத்தியில்  பிரதமர் மோடியின் இப்புதிய அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கவே இருந்த காங்கிரஸ் ஆட்சியிகாலத்திலேயே  இதற்கான திட்டம் கொண்டுவரப்பட இருந்த நிலையில் அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சிக்கல்களின் காரணமாக அப்போதைக்கு கைவிடப்பட்டிருந்த நிலையில்,  இந்தியாவின் பாதுகாப்பைக் காரணம்காட்டி முப்படைகளுக்கும் ஒற்றைத்தலைமை என்ற அறிவிப்பை தன் சுதந்திர தினவிழா உரையின் மூலம் மோடி அதிரடியாக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.