Asianet News TamilAsianet News Tamil

சீனா பக்கம் சாயும் மாலத்தீவு! எல்லையில் இருந்து வெளியேறத் தொடங்கிய இந்தியத் துருப்புகள்!

மாலத்தீவு ஊடங்களில் வெளியாகியுள்ள செய்தியின்படி, அட்டுவின் தெற்கே உள்ள அட்டால் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட 25 இந்திய துருப்புக்கள் மார்ச் 10ஆம் தேதிக்கு முன்னதாக வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

India Begins Withdrawing Troops From Maldives Amid Strained Ties sgb
Author
First Published Mar 12, 2024, 7:40 PM IST

மாலத்தீவில் அந்நாட்டு அதிப முகமது முய்சுவின் உத்தரவை அடுத்து, அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய விமானங்களப் படையை இந்தியா திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலத்தீவு ஊடங்களில் வெளியாகியுள்ள செய்தியின்படி, அட்டுவின் தெற்கே உள்ள அட்டால் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட 25 இந்திய துருப்புக்கள் மார்ச் 10ஆம் தேதிக்கு முன்னதாக வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபர் பதவிக்கு வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவராகக் கருதப்படுகிறா். இவர் அதிபராகப் பதவியேன்றறதும் விரைவில் மாலத்தீவின் கடல் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியப் படையை வெளியேற்றுவோம் என்று அறிவித்தார்.

இது குறித்து இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதிக்குள் மாலத்தீவு எல்லையில் இருந்து 89 இந்திய துருப்புக்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களை திரும்பப் பெற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து திரும்பப் பெற ஆரம்பித்தது தொடர்பாக மாலத்தீவு அல்லது இந்திய அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்தியப் படைகள் வெளியேறுவது குறித்து முடிவு எடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் மாலத்தீவு அரசு சீனாவுடன் ராணுவ உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் வலுவான இருதரப்பு உறவுகளை வளர்ப்பது என்றும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் சீனா மாலத்தீவுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் என்றும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

மாலத்தீவுடனான இந்தியாவின் உறவு 2023 செப்டம்பரில் முய்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்துதான் தளர்ச்சி அடையத் தொடங்கியது. இந்தியாவுடனான உறவில் இருந்து விடுபட்டு சீனாவின் ஆதரவைப் பெற மாலத்தீவு அரசு விரும்புகிறது. இதன் வெளிப்பாடாக, சென்ற ஜனவரி மாதம் மாலத்தீவு அதிபர் முய்சு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். உள்கட்டமைப்பு, எரிசக்தி, கடல் மற்றும் விவசாயத் துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

மாலத்தீவுகள் மற்றும் இலங்கையுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள ராஜதந்திர ரீதியான உறவுகள் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios