Asianet News TamilAsianet News Tamil

India at 75: இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகமுக்கிய போராட்டம் வைக்கம் சத்தியாகிரகம்..!

வைக்கம் மகாதேவர் கோயிலை சுற்றி இருக்கும் சாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

 

India at 75 most crucial chapters in freedom movement Vaikom Satyagraha against untouchability
Author
India, First Published Jun 14, 2022, 12:43 PM IST

இந்திய சுதந்திர இயக்கத்தில் வைக்கம் சத்தியாகிரகா மிக முக்கிய பங்காற்றியது. தீண்டாமைக்கு எதிராக போராட முடிவு செய்த பின் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட முதல் போராட்டமாக வைக்கம் சத்தியாகிரகம் அமைந்தது. மேலும் இந்து மதத்தை சேர்ந்த உயர்ந்த மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் இதர மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சாதிய கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் இயக்கமாகவும் இது மாறியது. இதில் ஸ்ரீ நாராயண குரு, மகாத்மா காந்தி மற்றும் ஈ வெ ராமசாமி நாயக்கர் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனற்.

1865 ஆண்டு திருவிதம்கூரில் பொது சாலைகள் அனைவருக்கும் திறக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து ஆறு தசாப்தங்கள் வரையிலும் கோட்டயத்தில் உள்ள வைக்கம் மகாதேவர் கோயிலை சுற்றி இருக்கும் சாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதில் மற்ற சாதியினர் கடந்த செல்வதை தடுக்கும் வதிமாக நோட்டீஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சாலைகளில் கடந்து செல்ல நாராயண குருவுக்கும் ஒருமுறை அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

தீண்டாமைக்கு எதிரான போராட்டம்:

எளவா சாதியை சேர்ந்த இளம் நபர் ஒருவர் இந்த தீண்டாமைக்கு எதிராக போராட முடிவு செய்தார். அவர் டி.கே. மாதவன். இவர் தேசபிமானி ஆசிரியர் ஆவார். மேலும் நாராய குருவின் ஸ்ரீ நாராயண தர்மா பரிபாலானயோக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளராகவும் காங்கிரஸ் தலைவர் ஆவார். மகாத்மா காந்தி திருநெல்வேலி வந்திருந்த போது, அவரை சந்தித்த டி.கே. மாதவன் தீண்டாமை பற்றி எடுத்துரைத்தார். மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என தெரிவித்தார். 

1923 ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ககிந்தா நிகழ்ச்சியில் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் தேசியவாதிகளான சர்தார் கே.எம். பனிக்கர், கே.பி. கேசவ மேனன், மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தான் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து கே கேலப்பன் தலைமையில் கேரளா பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் வைக்கமில் சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தார். 

மார்ச் 30, 1924 அன்று அனைத்து சாதியினர் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நடைமுறைக்கு மாற்றத்தை ஏற்படுத்த திருவிதாம்குர் அரசின் உயர்சாதி இந்து பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து வைக்கம் கோயில் அருகில் ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்து இருந்தனர். எனினும், போலீஸ் தடையை மீறி மூன்று சாதியை சேர்ந்த இளைஞர்கள் வீதியில் நடந்து சென்றனர். இவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

India at 75 most crucial chapters in freedom movement Vaikom Satyagraha against untouchability

காங்கிரஸ் பிரமுகர்கள் கைது:

இதே போன்று பல நாட்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில், முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் போலீஸ் தடையை மீறி வைக்கம் கோயிலை சுற்றி இருக்கும் சாலையில் நடந்து சென்று, கைதாகினர். கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதோடு துன்புறுத்தவும் செய்தனர். வன்முறை இன்றி நடைபெற்ற இந்த போராட்டம் 1924 வரை நீடித்தது.

இந்த போராட்டம் தேசிய அளவில் பரவியதை அடுத்து நாடு முழுக்க இதற்கு ஆதரவு கிடைத்தது. ஸ்ரீ நாராயண குரு நேரடியாக வைக்கம் சென்று, அங்கிருந்த போராட்டக்காரர்களுக்கு தனது ஆதாரவை தெரிவித்தார். 1925 மார்ச் மாத வாக்கில் ராஜகோபாலச்சாரியுடன் சேர்ந்து மகாத்மா காந்தி வைக்கம் வந்தார். மகாத்மா காந்தி வைக்கமில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த பிராமின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மகாத்மா காந்திக்கு அனுமதி மறுப்பு:

கொடூர எண்ணம் கொண்ட பிராமின் தலைவர் தீண்டாமை என கூறி மகாத்மா காந்தியை தனது வீட்டில் அனுமதிக்க மறுத்தார். மகாத்மா காந்தி திருவிதாம்குர் ராணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நாராயண குருவையும் சந்தித்தார். இதை அடுத்து இந்த போராட்டத்தில் கைதானவர்களை ராணி விடுதலை செய்தார். 

நவம்பர் 1925 வாக்கில் சத்தியாகிரக போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. கோயிலை சுற்றி இருக்கும் ஒரு சாலை தவிர நான்கு பிரதான சாலைகளும் அனைவரும் நடந்து செல்ல திறக்கப்பட்டது. 1936 ஆண்டு திருவிதாம்குர் அரசு கோயில் வளாகத்திற்குள் அனைத்து இந்துக்களும் எல்லா கோயில்களுக்கும் செல்ல அனுமதி வழங்கியது. 

Follow Us:
Download App:
  • android
  • ios