இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவை பிரதமர் மோடியுடன் பார்வையிட்டார். 

இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவை பிரதமர் மோடியுடன் பார்வையிட்டார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வெளியே பிரதமர் மோடி வரவேற்றார். அதைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒன்றாக ஆயுதங்கள் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: லண்டனில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு: கொதித்து எழுந்த சீக்கியர்கள் டெல்லியில் போராட்டம்

மேலும் ஜி7 தலைவர்கள் உச்சி மாநாடு மே மாதம் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் பிரதமர் மோடியுடன் டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவுக்கு சென்ற ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பூங்காவை பார்வையிட்டார். பின்னர் அங்கே பானி பூரி சாப்பிட்டதோடு மாம்பழ பன்னா மற்றும் லஸ்ஸியையும் பருகினார். அதைத்தொடர்ந்து பூங்காவில் உள்ள பால் போதி மரத்தை இருவரும் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக்காவல்... டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி!!

அங்குள்ள பால் போதி மரத்தில் மலர் தூவி பிரார்த்தனை செய்த பின்னர் இரு தலைவர்களும் பூங்காவில் நடைபயணம் மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அமர்ந்து பேசி, தேநீர் அருந்தினர். முன்னதாக, இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு, கடம்ப மரத்தால் செதுக்கப்பட்ட பெட்டியில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். 

இதுக்குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் சிறப்பான பேச்சுவார்த்தை நடந்தது. பாதுகாப்பு, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பிற விஷயங்களில் இந்தியா-ஜப்பான் உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். தளவாடங்கள், உணவு பதப்படுத்துதல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஜவுளி மற்றும் பலவற்றில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கான வழிகளையும் நாங்கள் விவாதித்தோம் என்று தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…