பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
 

INDIA alliance complete their seat sharing talks in bihar ahead of loksabha election smp

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

ஆனால், வெவ்வேறு சித்தாந்தங்கள், கொள்கைகள் கொண்ட மாநில கட்சிகள், தேசிய கட்சிகளான காங்கிரஸ், இடது சாரிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உரசல் போக்கு நிலவியது. இதனால், மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டி என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பஞ்சாபிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டி என அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நீண்ட இழுபறிக்கு பின்னர் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பீகார் மாநிலத்திலும் இழுபறி நிலவி வந்தது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

அதன்படி, ராஷ்டிர ஜனதா தள கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடுகளை செய்வதில் தொடர் குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடி வரி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

40 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது முதல் கட்ட தேர்தல் நடைபெறும் கயா உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு ஏற்கனவே ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளர்களை அறிவித்து அவர்கள் வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி, இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios