வான்வழி தாக்குதல் மூலம் கடும் சேதத்தை விளைவிக்கக்கூடிய ஸ்பைஸ் ரகு குண்டுகளை இஸ்ரேல் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படை கூடுதல் பலம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து  ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானிடையே  எல்லையில்  பதற்றம்  ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை எதிர்த்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து இந்திய எல்லையில் அத்துமீறி வருகின்றன, சீனாவின் உதவியுடன் இந்தியா மீது போர் தொடுக்கும் மனநிலையில் பாகிஸ்தான் இருந்து வருகிறது. இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்றும்  அடிக்கடி பாகிஸ்தான் எச்சரித்து வரும் நிலையில். இந்தியா தன் படை பலத்தை அதிகரிக்கும் வேலைகளில்இறங்கியுள்ளது.

  

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து போர்விமானங்கள் , நீர்மூழ்கி கப்பல்கள் அதிரக ரேடார்கள்  உள்ளிட்ட  இராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சீல ஆண்டுகளுக்கு முன்பு விமானப்படையை பலப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலுடன் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பில்  இரண்டாயிரம் ஸ்பைஸ் ரக குண்டுகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக குவாலியரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு ஸ்பைஸ் ரக குண்டுகளை இஸ்ரேல் அனுப்பிவைத்துள்ளது.

 

குவாலியரில் இருந்துதான் இவ்வகை  குண்டுகளைப் பயன்படுத்தக்கூடிய மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மிராஜ் ரக விமானங்கள் கார்கில் போரில் இந்தியாவிற்கு வெற்றியை ஈட்டிதந்த முக்கிய விமானமாகும், அத்துடன் புல்வாமா தாக்கதலுக்கு பதலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ரேடார்களின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு  பால்கோட்டில் தங்கியிருந்த தீவிரவாத முகாம்கள் மீது  2000 ரக ஸ்பைஸ் குண்டுகளை வீசித் தகர்த்தது.

பாலகோட் தாக்குதலில் வெறும் 12 குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதற்கே தீவிரவாதி முகாம்கள் தடம் தெரியாமல் அழிந்தன. அந்த அளவிற்கு 2000 ரக ஸ்பைஸ் குண்டுகள் வலிமை கொண்டதாகும். இந்த குண்டுகளால் ஒரு கட்டிடத்தையே முற்றிலும் தரைமட்டமாக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது, தங்கள் நாட்டு ராணுவத்தில் பிரத்யேகமான பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்பைஸ் ரக  குண்டுகளை இஸ்ரேல்  இந்தியாவிற்கு வழங்கியிருப்பதன் மூலம் பாகிஸ்தான் உச்சகட்ட பீதி அடைந்துள்ளது.