Asianet News TamilAsianet News Tamil

ஊழல், குடும்ப ஆட்சியை இந்திய ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது; வெள்ளையனே வெளியேறு தினத்தில் பிரதமர் மோடி!!

வெள்ளையனே வெளியேறு நினைவு தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக இந்தியா செயல்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

India Against Corruption, Dynasticism; PM Modi on Quit India Movement
Author
First Published Aug 9, 2023, 10:47 AM IST

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறும் வகையில் இன்று நாடு முழுவதும் இந்த நாள்  கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சிறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். காந்திஜியின் தலைமையில், இந்தியாவை காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவிப்பதில் இந்த இயக்கம் பெரும் பங்காற்றியது. ஊழலற்ற இந்தியா, குடும்ப ஆட்சியற்ற இந்தியா, சமாதான அரசியலற்ற இந்தியா'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஒருமித்த குரலில் இவை எதிரொலிக்கப்பட்டு வருகிறது என்று மோடி தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஊழலற்ற ஆட்சியை கொடுப்போம், குடும்ப ஆட்சியை எதிர்ப்போம் என்று கூறி வருகின்றனர். அதையே இன்றும் வெள்ளையனே வெளியேறு தினத்தில் பிரதமர் மோடி ட்விட்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

உலகின் பொருளாதார வல்லரசாக முன்னேறும் இந்தியா.. உலக அளவில் இந்தியா சாதித்தது எப்படி?

இன்று நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்திய பாஜக எம்பிக்கள், ஊழலற்ற இந்தியா, குடும்ப ஆட்சியற்ற இந்தியா, சமாதான அரசியலுக்கு எதிரான இந்தியா கோஷத்தை எழுப்பி, பதாகைகளை கைகளில் ஏந்தி நின்றனர்.

இதற்கிடையில், பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ஜனநாயகத்தைப் பாதுகாக்க குடும்ப ஆட்சியும் ஊழலும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று பதிவு செய்து பிரதமர் மோடியின் வெள்ளையனே வெளியேறு பதிவை எதிரொலித்தார். "தலைவிரித்தாடும் குடும்ப ஆட்சி இந்தியாவிலிருந்து வெளியேறியது, துர்நாற்றம் வீசும் ஊழல் இந்தியாவிலிருந்து வெளியேறியது, சமாதான அரசியல் இந்தியாவை விட்டு வெளியேறியது. நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டுமானால், இந்த மோசமான குடும்ப ஆட்சி மற்றும் ஊழலை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்," என்றார். 

தனது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததே, சொந்த கூட்டணி கட்சிகளின் நம்பிக்கையை சோதிக்கவே என்று பிரதமர் மோடி செவ்வாய் கிழமை எதிர்க்கட்சியை விமர்சித்து இருந்தார். 

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் நம் சுதந்திர இந்தியா - சிறப்பு பார்வை!

Follow Us:
Download App:
  • android
  • ios