கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் நம் சுதந்திர இந்தியா - சிறப்பு பார்வை!
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால், அது நிச்சயம் மிகையல்ல. இது, ஏதோ ஒரு துறையில் இந்தியா முன்னோடியாக திகழ்வதால் ஏற்பட்ட மாற்றமல்ல, மாறாக ஒவ்வொரு துறையிலும் இந்தியா தனது சிறப்பான முயற்சியை அளித்து வருவதால் ஏற்ப்பட்ட மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்..
இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி, அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்தியா இன்று ஸ்மார்ட் போன்களுக்கான உலகின் மூன்றாவது பெரிய சந்தையாகவும், கார்களுக்கான ஆறாவது பெரிய சந்தையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மென்பொருள் துறையில் சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும், 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள்.
இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் 26 வயதுக்குட்பட்டவர்கள், இந்த தனித்துவமான மக்கள்தொகை அமைப்பு இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் ஒரு அதிவேக இயந்திரமாக மாற்றும் வல்லமையை கொண்டிருக்கிறது. பல உலக நாடுகளை ஒப்பிடும்போது, இளைஞர்களின் பலம் கொண்டு, இந்திய அதிவேகமாக வளர்ந்து வருகின்றது.
செல்வாக்கு மிகுந்த நாடாக மாறும் இந்தியா..
கடந்த 2008ம் ஆண்டில், அப்போதைய அரசாங்கம் அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்காக தனது பாராளுமன்ற பெரும்பான்மையை உறுதி செய்தது. இது இந்தியாவை உலகளாவிய அணுசக்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக அதை மாற்றியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியா பெற்ற உதவிகளை விட, அண்டை நாடுகளான பூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகியவை, உதவி பெற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
Independence Day 2023 : சுதந்திர தினம் அன்று இந்திய வரலாறு பற்றி படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்.!!
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல், சுமார் 70க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்திய மோடி, 2018ம் ஆண்டுக்கான உலக வங்கியின் எளிதாக தொழில் செய்யக்கூடிய பட்டியலில் இந்தியாவை 30 இடங்கள் முன்னேற வைத்து 100வது இடத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
வளரும் கூட்டாட்சி
பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் வணிகம் செய்து கொண்டிருந்த பல நாடுகள் இந்தியாவை ஒரு ஒற்றை நாடாக தான் பார்த்தது, ஆனால் இது 29 மாநிலங்கள் கொண்ட ஒரு மிகச்சிறந்த கூட்டாட்சி என்பதை யாரும் சிந்தித்து பார்க்கவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நமது கூட்டாட்சி அமைப்பு குறித்து பலருக்கு தொடர்ச்சியாக தெரியவருகிறது. மாநிலங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுடன் இணைந்து இந்தியா ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி வருகிறது என்பதை பலரும் அறிந்து வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டின் நடுப்பகுதியில், வரலாற்றில் மிக தைரியமான ஒரு வரி சீர்திருத்தத்தை இந்தியா செயல்படுத்தியது. இது பல மாநில மற்றும் கூட்டாட்சி வரிகளை தேசிய வரியாக மாற்றியது, அது தான் இன்று சரக்கு மற்றும் சேவை வரி அல்லது ஜிஎஸ்டி என அழைக்கப்படுகிறது. மிகவும் ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவதே அதன் நோக்கமாகும்.
ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான போராட்டம்
ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான போரில் இந்தியா பல இடங்களில் வெற்றி பெற்று வருகிறது, அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழும் விஷயம் தான் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்திய பிரதமர் இரண்டு முக்கியமான, மற்றும் அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. அவற்றுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் களமிறக்கப்பட்டதும் நாம் அறிந்ததே. பிரதமரின் இந்த நடவடிக்கையின் முக்கிய காரணமே இந்தியாவில் கருப்பு பணமே இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், அதேபோல கடந்த 2005ம் ஆண்டு அமலான மணி லாண்டரிங் சட்டத்துக்கு இன்னும் அதிக வலு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் மயமாகும் எதிர்காலம்
அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் புதிய தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்கின்றனர், நாட்டில் ஒவ்வொரு 100 பேரில் 62 பேரிடம் இணைய தொடர்பு உள்ளது என்பது ஓர் மாபெரும் சாதனை. மோடி அரசாங்கம் வெளியிட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம், நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், ஆன்லைனில் அதிக அரசு சேவைகளை வழங்குவதற்கும் உதவுகிறது.
சேவைகளை பெறுவது முதல் பல விஷயங்கள் தற்பொழுது இந்தியாவில் டிஜிட்டல் மயமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு காலத்தில் பெரிய பெரிய வணிக வளாகங்களில் மட்டுமே இருந்த கியூஆர் ஸ்கேன் கோடுகள், தற்பொழுது சாலையோர கடைகளிலும் அமலில் உள்ளது ஒரு மிகப்பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த மாபெரும் வளர்ச்சியின் ஒரு சிறிய பங்கு தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ முதல் கோவிட்-19 வரை! சுதந்திர இந்தியாவின் வியக்க வைக்கும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள்