Asianet News TamilAsianet News Tamil

Independence Day 2024 : சுதந்திர தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்..

ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்இந்திய சுதந்திர தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Independence day 2024 : Date, History, Theme, Significance and Importance Rya
Author
First Published Aug 12, 2024, 9:36 AM IST | Last Updated Aug 15, 2024, 8:01 AM IST

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியாவில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சுதந்திர காற்றை இந்தியா சுவாசிக்க தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, தங்களின் வீரம், தேசப்பற்று ஆகியவற்றின் மூலம், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை முடிவுக்கு கொண்டு வந்த லட்சக்கணக்கான நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திரம் தினம் என்பது மகத்தான பெருமைக்குரிய நாளாக கருதப்படுகிறது. சுதந்திர தினத்தன்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த வீரர்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர நாளில் அரசாங்க கட்டிடங்களை வண்ண விளக்குகளால் ஒளிரும், வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் மீது மூவர்ணக் கொடிகள் பறக்கவிடப்படும். 

மூவர்ணக் கொடி + பிரிட்டிஷ் கொடி.. 1947 ஆகஸ்ட் 15 அன்று.. இப்படியொரு செயலை செய்தாரா நேரு? வைரல் கடிதம்!

சுதந்திர தினத்திற்கு முன்னதாக நாட்டின் குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மேலும் சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி, மக்களிடம் உரையாற்றுவார்கள். நாட்டின் மாநிலத் தலைநகரங்களில் சுதந்திரன தின கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பள்ளி மாணவ, மாணவியர் இதில் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள்.

சுதந்திர தினம் 2024: வரலாறு

1757 ஆம் ஆண்டு வங்காளத்தின் கடைசி நவாப் பிளாசிப் போரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். இதுவே இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கமாக அமைந்தது. 1857 இல் மீரட்டில் நடந்த சிப்பாய் கலகம் இந்திய சுதந்திர போராட்டம் வலுப்பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸும் (INC) மற்றும் பிற அரசியல் அமைப்புகளும், மகாத்மா காந்தியின் தலைமையில், ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய சுதந்திர பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் தொடங்கின.

1929 இல், லாகூரில் நடந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும். இந்த மாநாட்டின் போது, இந்திய நாடாளுமன்றம் ‘பூர்ண ஸ்வராஜ்’ அதாவது  இந்தியாவிற்கு முழு சுதந்திரம் தேவை என்ற கோரிக்கைய்யை அறிவித்தது. 1942 இல், ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர இந்திய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. இதன் விளைவாக, காந்தி மற்றும் பிற தலைவர்கள், தேசியவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். 1947 ல் இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட மத வன்முறை மற்றும் கலவரங்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 

பல போராட்டங்கள், உயிர் தியாகங்களுக்கு பிறகு ரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இந்திய பாராளுமன்றத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடந்தது. இதை தொடர்ந்து, சுதந்திரத்திற்கு முன் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, மவுண்ட்பேட்டன் பிரபு பிரிட்டிஷ் இந்தியாவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு புதிய சுதந்திர நாடுகளாகப் பிரித்தார். இடைவிடாத 190 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, இந்தியா ஒருவழியாக ஆகஸ்ட் 15, 1947 அன்று ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சி முடிவுக்கு வந்ததுடன், இந்தியா சுதந்திர நாடாக மாறியது. 

சுதந்திர தினம் 2024: முக்கியத்துவம்

தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலுக்கும் வீரத்திற்கும் மரியாதை செலுத்தும் வகையில் சுதந்திர தினம் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நமது சுதந்திரப் போராளிகள் செய்த பல தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நமது தேசத்தின் வரலாறு இந்த வீரம் மிக்க நபர்களால் வழிநடத்தப்பட்ட எதிர்ப்பு மற்றும் எழுச்சிகளின் கதைகளால் நிரம்பியுள்ளது.

சுதந்திர தினம் 2024: கருப்பொருள்

விக்சித் பாரத் அதாவது வளர்ந்த பாரதம் என்ற நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், சுதந்திரத்திற்கு பிறகு 1947 முதல் 2047 வரை 100 ஆண்டுகளுக்குள் வளர்ந்த தேசமாக மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிகாரம் பெற்ற நாடாகவும் மாற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

செயல்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள்

நாடு முழுவதும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கலாச்சார நிகழ்ச்சிகள், கொடியேற்றும் விழாக்கள் மற்றும் தேசபக்தி பாடல்கள் மற்றும் நடனங்களை ஏற்பாடு செய்கின்றன. மெய்நிகர் நிகழ்வுகள், வலைப்பக்கங்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் என தொழில்நுட்ப வளர்ச்சியும் தேசபக்தியை பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios